உள்ளூர் செய்திகள்

இயற்கை முறையில் ஜாம், இட்லிபொடி தயாரித்து விற்பனை செய்யும் மாணவிகள்.

இயற்கை முறையில் வல்லாரை கீரை மூலம் ஜாம், இட்லி பொடி தயாரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

Published On 2023-04-13 06:34 GMT   |   Update On 2023-04-13 06:34 GMT
  • வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும்.
  • ஜாம் மற்றும் இட்லி பொடியினை பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

செம்பட்டி:

திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் 4-ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டபடிப்பு பயின்று வரும் மாணவிகள் பாலமுனீஸ்வரி, ஷெர்லி, பிளஸ்சி, ஹேமபிரியா, லெட்சுமி, அபிநயா ஆகியோர் ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் நடந்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வகுப்பின் கீழ் இயற்கை முறையில் வல்லாரை கீரை உற்பத்தி செய்து, வல்லாரை இலை களோடு பழங்களையும் சேர்த்து ஜாம் மற்றும் இட்லி பொடி தயார் செய்து வருகின்றனர்.

கீரைகளை குழந்தைகள் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலியை குறைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஜாம் மற்றும் இட்லி பொடியினை பொது மக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதால் தொடர்ந்து இவற்றை தயாரித்து அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News