உள்ளூர் செய்திகள்
ஓசூரில் களிமண்ணில் விதைப்பந்துகளை வைத்து விநாயகர் சிலைகளை தயாரித்த தனியார் பள்ளி மாணவர்கள்.
விதைப்பந்துகளை வைத்து விநாயகர் சிலைகளை தயாரித்த மாணவர்கள்
- விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- சிலைகளை தயாரித்த பின்னர், அவற்றை மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட கொண்டு சென்றனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவ, மாணவியர் ஆண்டுதோறும், விநாயகர் பண்டிகையையொட்டி களிமண்ணில் விதைப்புகளை வைத்து விநாயகர் சிலைகளை தயாரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் களிமண்ணில் விதைப்பந்துகள் வைத்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி வழங்கினர். சிலைகளை தயாரித்த பின்னர், அவற்றை மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட சென்றனர். மாணவ, மாணவியரின் இந்த ஈடுபாட்டினை, பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகவும் பாராட்டினர்.