உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை படத்தில் காணலாம்.

திண்டிவனத்தில் அவலம் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள்

Published On 2022-10-19 07:05 GMT   |   Update On 2022-10-19 07:05 GMT
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயி ல்வதற்கு திண்டிவனம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர்.
  • மாணவர்கள் பஸ்சில் இடம் இருந்தாலும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி கொண்டு செல்கிறார்கள்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சுற்றி உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிசெயல்பட்டு வருகிறது. அதுபோல திண்டிவனம் சுற்றியுள்ள கிராமங்களான சாரம், வெள்ளிமேடுபேட்டை, மேல்பேட்டை, ஆகிய பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயி ல்வதற்கு திண்டிவனம் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர்.

இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பஸ் வசதிகள் இல்லை. இது ஒருபுறமிருக்க, இருக்கும் பஸ்களில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பஸ்களை இயக்குவதற்கு டிரைவர்கள் அஞ்சுகி ன்றனர் . மாணவர்கள் பஸ்சில் இடம் இருந்தாலும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி கொண்டும், மேற்கூரையில் ஏறியும் பஸ்சை அடித்தும் செய்யும் அட்டகாசத்தால் பயணிகள் கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

மாணவர் ஒருவர் ஓடும் பஸ்சை பிடித்துக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் சில ரோமியோக்கள் முன்னாள் மாணவர்களும், சமூக விரோதிகளும் பஸ்சில் ஏறி பள்ளி கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது.மேலும் அவர்களும் ஹீரோக்களாக தங்களை காண்பிப்பதற்காக பேருந்தில் ஏறி அட்ட காசத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாற்றுகின்றனர்.

Tags:    

Similar News