உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-01 10:15 GMT   |   Update On 2023-06-01 10:15 GMT
  • அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
  • ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:-

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மாணவா்களுக்கு உதவும் வகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாற்றுசான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், 8 அல்லது 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் (மாற்று திறனாளிகள், விதவை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதன்மையானவா், தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவா்கள்) ஆகியவற்றுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் / முதல்வா் அல்லது அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்கள்: 9994043023, 7708709988, 9840950504, 9442220049 ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News