உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை- மைதானத்தை சுற்றி ஓடியபோது சுருண்டு விழுந்த மாணவன் உயிரிழப்பு

Published On 2022-11-10 12:59 GMT   |   Update On 2022-11-10 12:59 GMT
  • சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் மைதானத்தை 4 முறை சுற்றி ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
  • மாணவன் மரணம் தொடர்பாக அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். அத்துடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்களை, பள்ளியின் மைதானத்தை சுற்றி 4 முறை ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாணவர்கள் மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது மோகன்ராஜ் என்ற மாணவன் திடீரென சுருண்டு விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்துபோனான். இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News