ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தரமான மீன்களா என சோதனை மேற்கொண்ட போது எடுத்தபடம்.
ஒகேனக்கல்லில் அழுகிய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- சோதனையில் பல கடைகளில் இருந்து சர்வ சாதாரணமாக தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 300 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டது.
- மீன்களை மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்களை அளிக்கப்பட்டன
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்த பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து செல்கின்றனர்.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கவே சமையலின் தரமும் குறைய தொடங்கியது. இந்நிலையில் பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்கள் அதிக அளவில் சென்றதால், பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் வேலுச்சாமி, ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் மற்றும் ஒகேனக்கல் மீன்வள பணியாளர்கள் நேற்று திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல கடைகளில் இருந்து சர்வ சாதாரணமாக தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 300 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டது. அந்த மீன்களை மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்களை அளிக்கப்பட்டன.
மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவல ர்கள் மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்தனர்.