உள்ளூர் செய்திகள்

10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள ஆலங்குளம்-சுரண்டை வழித்தட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-12-24 14:00 IST   |   Update On 2022-12-24 14:00:00 IST
  • ஆலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது.
  • இந்த பஸ் மூலம் அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, குறிப்பன்குளம், கிடாரக்குளம், அகரம், வீராணம், கருவந்தா, பரன்குன்றாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது, தடம் எண் 42 ஏ ஆக மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் வழியோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இந்த தடத்தில் வேறு பஸ்களும் இயக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கிராம மக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News