உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்து மணி ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நுகர்வோர் பேரவை கோரிக்கை

Published On 2023-06-19 14:21 IST   |   Update On 2023-06-19 14:21:00 IST
  • கோவில் கீழ் பிரகாரத்தில் கடல் அருகில் தடுப்புகம்பிகள் அமைத்திட வேண்டும்.
  • சண்முக விலாசம் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக சண்முக விலாசம் முகப்பு தடுப்பு அகற்றிட வேண்டும்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பெரிய அளவிலான மணி வழங்கி உச்சிக்கால பூஜை சமயத்தில் மணி ஒலிக்க ஏற்பாடு செய்தார். சமீப காலமாக அந்த மணி ஒலிக்கவில்லை. எனவே பூஜை நேரத்தில் அந்த மணி ஒலிக்க வேண்டும் எனவும், கோவில் கீழ் பிரகாரத்தில் கடல் அருகில் தடுப்புகள் இல்லாமல் உள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர், குழந்தைகள் விளையாடுகின்றனர், எனவே உடனடியாக தடுப்பு கம்பிகள் அமைத்திட வேண்டும் எனவும், திருக்கோவில் பணிகள் செய்த வள்ளிநாயக சுவாமிகள் ஜீவசமாதி புதுப்பித்து விட வேண்டும் எனவும், சண்முக விலாசம் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக சண்முக விலாசம் முகப்பு தடுப்பு அகற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News