உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தனியார் கம்பெனியில் திருடும் இரும்பு பொருட்கள் கடத்தல்

Published On 2023-01-08 07:47 GMT   |   Update On 2023-01-08 07:47 GMT
  • கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர்.
  • பொதுமக்கள் யாறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் அருகே பெரியப் பட்டு பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனி உள்ளது. இங்கு இருந்து பல்லாயிரம் டன் இரும்பு பொருட்களை ஏராளமானோர் தினந் தோறும் திருடிக் கொண்டு லாரி டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் திருடி சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் தனியார் கம்பெனியிலிருந்து பல்லாயிரம் டன் கணக்கில் இரும்பு பொருட்கள் திருடி சென்றதாக போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமானவரை கைது செய்து வருகின்றனர். போலீசார் இரும்பு பொருட்கள் திருடும் கும்ப லை தீவிரமாக கண்கா ணித்து பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருவதால் கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடற்கரை வழியாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை வாகனங்கள் மூலமாக மர்ம கும்பல் கடத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தனியார் கம்பெனியில் இருந்து பெரிய அளவிலான இரும்பு பொருட்களை சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து வாகனங்கள் மூலமாக புது சத்திரம் பகுதி அய்யம் பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கடற்கரை ஓரமாக கொண்டு வரப்பட்டு கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் மிஷின் ஆகிய வற்றை கொண்டு வந்து நள்ளிரவு முதல் அதிகா லை வரை இரும்பு பொருட்களை தங்களுக்கு தேவையான அளவில் பிரித்து எடுத்து 10 -க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கடற்கரை ஓரமாகவே இரும்பு பொருட்களை கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் பல்வேறு கெடுபிடி விதித்தாலும் மர்ம கும்பல் நூதன முறையில் கடற்கரை ஓரமாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை கடத்தும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News