உள்ளூர் செய்திகள்

 விளையாட்டு போட்டிகளை பள்ளி நிறுவனர் வி.எம்.அன்பரசன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சரக அளவில் விளையாட்டு போட்டி

Published On 2022-08-25 15:18 IST   |   Update On 2022-08-25 15:18:00 IST
  • ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டி போட்டிகள் நேற்று நடைபெற்றது.
  • 500 பேர் கலந்துகொண்டனர்கள்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டி போட்டிகள் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் சூளகிரி சரக அளவில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 500 பேர் கலந்துகொண்டனர்கள். பள்ளி நிறுவனர் வி.எம்.அன்பரசன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கி மாணவர்களை ஊக்கபடுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டி சூளகிரி சரக செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, சரக இணைசெயலாளர் செந்தில்குமார், கோவிந் அரசு மற்றும் தனியார் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பூபேஷ்குமார் செய்து இருந்தார்.

Tags:    

Similar News