உள்ளூர் செய்திகள்

ஜூடோ போட்டியில் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-09-09 15:18 IST   |   Update On 2023-09-09 15:19:00 IST
  • மாணவிகள் எடை தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.

மொரப்பூர்,  

கொங்கு சஹோதயாவில் மாவட்ட அளவிலான ஜீடோ போட்டி, கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடை பெற்றது. இப்போட் டியில் பல பள்ளியிலிருந்து மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அதில் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பாஷியா இஷால் 11-வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 40-கிலோ எடை தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மேலும், 5-ம் வகுப்பு மாணவன் அமுதவன் 11-வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 25-கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்று 2-வது பரிசான வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். 8-ம் வகுப்பு மாணவன் சையத் சல்மான் 16-வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் இயக்கு நர் தமிழ்மணி, பள்ளி முதல்வர் வெற்றிவே ல்செல்வம், பாராட்டி பதக் கங்களை வழங்கி கௌரவித்தனர். உடன் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு மாணவச் செல் வங்களை பாராட்டி சிறப் பித்தனர்.

Tags:    

Similar News