உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவில் (கோப்பு படம்)

திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-06-27 05:10 GMT   |   Update On 2022-06-27 05:10 GMT
  • திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும்.
  • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிப் பெருந்திருவிழாவும் ஒன்றாகும். இவ்வருடத்துக்கான திருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக கொடி படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜூலை 3-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஜூலை 10ந் தேதி திருத்தேர் நகர் வலம் வருதலும், 7ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் ஆனிப் பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News