உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் பணியாணையை கல்லூரியின் தலைவர் அரங்கநாதனிடம் வழங்கினார்.

போச்சம்பள்ளி ஸ்ரீ விநாயகா கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-06-11 15:43 IST   |   Update On 2022-06-11 15:43:00 IST
  • 90 மாணவ, மாணவிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
  • 60 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஸ்ரீ விநாயகா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐ.எம்.கிரியர்ஸ் பிரைவேட் லிமிட் சென்னை ஆகியவை இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

ஸ்ரீ விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாமாண்டு எந்திரவியல், ஆட்டோ மொபைல் மற்றும் டூல் அண்ட், டை துறையை சேர்ந்த 90 மாணவ, மாணவிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

அதில் 60 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதன் மூலம் வேலை வாய்ப்பை பெற்றனர். முன்னதாக கல்லூ ரியின் முதல்வர் எழிலரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் அரங்கநாதன், செயலாளர் ராஜா அண்ணாமலை, இணை செயலாளர் சுடலிலட்சுமி, துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் 60 மாணவ, மாணவியரின் பணியாணையை ஐ.எம். கிரியர்ஸ் பிரைவேட் லிமிட் சென்னையின் மேலாளர்கள் தியாகராஜன் மற்றும் கனகவேல் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளரிடம் வழங்கினர்.

Similar News