உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் பாராட்டி இனிப்பு வழங்கிய காட்சி.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஸ்ரீஜெயேந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-06-28 09:16 GMT   |   Update On 2022-06-28 09:16 GMT
  • பிளஸ்-1 பொதுத்தேர்வினை எழுதிய 251 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
  • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

நெல்லை:

நெல்லை மகாராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை எழுதிய 251 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி ஷ்ரேயா 594 மதிப்பெண்களும், அல்சமீனா 593 மதிப்பெண்களும், எபிஷா 591 மதிப்பெண்களும், சிவ சுப்பிரமணிய மனோஜ், ஸ்ரீராம், ஜனனி ஆகிய 3 பேரும் 589 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மேலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் பாடங்களில் தலா 7 பேரும், வேதியியலில் ஒருவரும், உயிரியல் பாடத்தில் ஒருவரும், வணிகவியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 2 பேரும், கணக்குப்பதிவியலில் 5 பேரும் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News