உள்ளூர் செய்திகள்

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

Published On 2023-01-11 12:56 IST   |   Update On 2023-01-11 12:56:00 IST
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
  • மாணவர்களுக்கு பள்ளி பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்னர்.

ஊத்துக்குளி :

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-வது விளையாட்டு விழாப்போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

ஊத்துக்குளி சபரி இன்டேன் நிறுவனர் சாவித்தரி பெரியசாமி ஒலிம்பிக் சுடரை ஏற்றி சிறப்பித்தார். விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட இறகுப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளரும் இந்திய இறகுப்பந்து அணியின் பயிற்சியாளருமான மோகன்குமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

பள்ளி உபதலைவர் கருப்புசாமி, தாளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் செநதில்நாதன், பெரியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்னர். முடிவில் தமிழாசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News