உள்ளூர் செய்திகள்

இச்சிப்பட்டி யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

Published On 2023-01-09 10:35 IST   |   Update On 2023-01-09 10:35:00 IST
  • பள்ளி மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு பள்ளி மைதானத்தில் ஏற்றப்பட்டது.
  • விளையாட்டுக்குழு செயலர் கவிதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் வருடாந்திர விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் எம்.என்.பொன்னுசாமி தலைமை வகித்தார்.

பள்ளி தலைவர் சி.பழனிச்சாமி,பள்ளிச்செயலர் டாக்டர். சிவசண்முகம் , ஏனைய பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தொழில் முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை மற்றும் சர்வதேச பதக்கம் வென்ற ஸ்ரீநிதி அபிராமி கலந்துகொண்டார்.

கவுரவ விருந்தினராக சாரண, சாரணியர் இயக்கத்தின் பல்லடம் மாவட்ட ஆணையர் பழனிசாமி பங்கேற்றார். 

பள்ளி முதல்வர் அண்ணாமலை ,துணை முதல்வர்கள் நிஜிலா பானு, சசிகலா முன்னிலை வகித்தனர்.விழாவில் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து பள்ளி மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு பள்ளி மைதானத்தில் ஏற்றப்பட்டது. அறிவியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், ஐசக் நியூட்டன், மைக்கேல் பாரடே அணிகளை சார்ந்த சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் யேசுராஜ் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.

பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. விளையாட்டுக்குழு செயலர் கவிதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News