உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.


மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

Published On 2023-01-26 14:46 IST   |   Update On 2023-01-26 14:46:00 IST
  • நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக குடியரசு தின விளையாட்டு விழா திருமறையூரில் நடைபெற்றது.
  • முன்னாள் ராணுவ வீரர் ராஜசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தென்திருப்பேரை:

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக குடியரசு தின விளையாட்டு விழா திருமறையூரில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ -மாணவிகளுக்கும், முதியோர் இல்ல ஆண்கள், பெண்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தன்ராஜ் ஜேக்கப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் தம்பு என்ற அருன் சாமுவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் ராஜசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொழிலதிபர் சேகர், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் மெட்டில்டா, செவித்திறன் குன்றியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி கரோலின், முதியோர் இல்ல பொறுப்பாளர் ஜான்சி ராணி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வி.ஜெபகரன் பிரேம்குமார் செய்து இருந்தார்.

Tags:    

Similar News