உள்ளூர் செய்திகள்

போட்டியில் கலந்து கொண்டு ஓடிய மாற்றுத்திறனாளிகள்.

பாளை அண்ணா விளையாட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

Published On 2023-02-18 09:14 GMT   |   Update On 2023-02-18 09:14 GMT
  • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டினள் அனைத்து வயது பிரிவினருக்கும் பாளை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
  • மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

நெல்லை:

நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மாற்றுத் திறனாளி களுக்கான 2022-23-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கள் அனைத்து வயது பிரிவினருக்கும் பாளை அண்ணா விளை யாட்டரங்கில் நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தொடங்கி வைத்தார். கை, கால் ஊனமுற்றோர் பிரிவினருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் இறகுபந்து விளையாட்டு, காது கேளாதோருக்கான 100 மீட்டர் ஓட்டம், கபாடி போட்டிகள், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு 100 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் எறிபந்து போட்டிகள், பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் மற்றும் சிறப்பு கையுந்துபந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் முதல் இடம் பிடிப்பவருக்கு ரூ.3 ஆயிரமும், 2-வது பரிசு பெறுபவரக்கு ரூ.2 ஆயிரம், மற்றும் 3-வது பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். மாவட்டத்தில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News