உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்

Published On 2022-09-26 08:57 GMT   |   Update On 2022-09-26 08:57 GMT
  • அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது.
  • பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் 64 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. பக்தர்களின் வாழ்வில் மனக்குறை கள், கடன்தொல்லைகள் நீங்கிடவும், பருவ மழை பெய்திட வேண்டியும் சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. பின்னர் பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், சந்தனம், திருநீறு, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News