உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாக பூஜை

Published On 2023-02-09 10:22 GMT   |   Update On 2023-02-09 10:22 GMT
  • மார்ச் 19 மற்றும் 26-ந் தேதிகளில் சிறப்பு யாகபூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருப்பூர் :

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த நினைவாற்றல் பெற்று தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் வழங்க வேண்டி திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் சிறப்பு யாக பூஜையுடன், மாணவர்கள் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தி அருளாசி வழங்கப்படும்.

அவ்வகையில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வருகிற 26-ந் தேதி மற்றும் மார்ச் 5-ந் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 12-ந் தேதி,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 19 மற்றும் 26-ந் தேதிகளில் சிறப்பு யாகபூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் காலை9 மணிக்கு சிறப்பு வேள்வி, 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 11 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாத்துமறை மற்றும் மகாதீபாராதனை, 12 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு பிரசாத வினியோகம் நடைபெறும்.

மாணவ, மாணவிகள் நலனுக்காக முற்றிலும் இலவசமாக நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, மாணவர்களும் குடும்பத்தினரும் பயன்பெறலாம் என திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News