உள்ளூர் செய்திகள்

தோரணமலை கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற போது எடுத்த படம்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தோரணமலை கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-04-14 09:21 GMT   |   Update On 2023-04-14 09:21 GMT
  • தீர்த்தம் எடுத்து வரப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.
  • பொதுநல ஆர்வலர்களுக்கு தோரண மலையான் விருது வழங்கப்பட்டது.

கடையம்:

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இது அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபடப்பட்ட சிறப்புகளும், மலை மீது குகையில் அமைந்த முருகன் கோவிலாகும். மேலும் இந்த மலையை சுற்றிலும் 64 தீர்த்த சுனைகள் அமைந்த சிறப்புடையதாகும்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மேம்படவும், உலகம் செழிப்பு பெற வேண்டியும் இன்று காலை சிறப்பு பூஜைகள் அடிவாரத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து மலை மீது தீர்த்தம் எடுத்து வரப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டது .

விவசாய கருவிலான ஏர், கலப்பை, மரம், தண்ணீர் இறவை செய்யும் கூனை உள்பட விவசாயக் கருவிகள் பசுமர கன்றுகள் வைத்து விவசாயிகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. சமூக சேவை மற்றும் பொதுநல ஆர்வலர்களுக்கு தோரண மலையான் விருது வழங்கப்பட்டது. மேலும் வருட பிறப்பை முன்னிட்டு 51 பெண்கள் பொங்கலிட்டு படையலிட்டு வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்ப கராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News