உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை விரைவு ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு நடந்து.

25 ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணத்தில் சிறப்பு வரவேற்பு

Published On 2022-10-25 08:04 GMT   |   Update On 2022-10-25 08:04 GMT
  • மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை இன்று துவங்கியது.
  • செங்கோட்டையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.

சுவாமிமலை:

மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை துவக்கம்.மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை இன்று துவங்கியது.மயிலாடுதுறையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.

இதே மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். இன்று 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில் 23 பெட்டிகளை இணைத்து இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை. நிறுத்தப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கும்பகோணம் வர்த்தக சங்கத்தினர். மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர்.அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News