உள்ளூர் செய்திகள்

திருச்சி- திருவாரூர் இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2023-03-31 09:48 GMT   |   Update On 2023-03-31 09:48 GMT
  • திருச்சியிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு முற்பகல் 11.40 மணிக்கு சென்றடையும்.
  • திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.

தஞ்சாவூர்:

திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூரில் நாளை (சனிக்கிழமை) உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.

இதனையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி-திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06131) இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் திருச்சியி லிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பொன்மலை, மஞ்சத்திடல், திருவெறும்பூர், சோளகம்பட்டி, பூதலூர், ஆலங்குடி, தஞ்சாவூர், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குளிக்கரை வழியாக திருவாரூக்கு முற்பகல்
11.40 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்க மாக திருவாரூர்-திருச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06132) திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.

இதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை-திருவாரூர் சிறப்பு ரெயிலானது (06133) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூரை இரவு 10.20 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக, நாளை ஒரு நாள் மட்டும் திருவாரூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் (06134) திருவாரூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 5.55 மணிக்கு வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News