உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்தபடம்.
ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் சுயநிதிப்பிரிவில் சிறப்பு கருத்தரங்கு
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
- தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி கணினி அறிவியல் (சுயநிதிப்பிரிவு) துறையில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பெங்களூரில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் ஆ.கவிதா வரவேற்று பேசினார். பேராசிரியர் டி.பெனட் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் ஜெயந்தி, சகாய ஜெயசுதா மற்றும் ஆய்வக உதவியாளர் ஜெயந்தி கலந்து கொண்டனர். மேலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.