உள்ளூர் செய்திகள்

ஆடி திருவிழாவை முன்னிட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-08-06 15:43 IST   |   Update On 2023-08-06 15:43:00 IST
  • பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • சக்தி அழைத்தலும், மகா கும்ப பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தருமபுரி, 

தருமபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பச்சையம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சக்தி அழைத்தலும், மகா கும்ப பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News