உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
- கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
- செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவ அலுவலர் மோனிகா முன்னிலையில் நடந்தது.
முகாமில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளதா என கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.