உள்ளூர் செய்திகள்

முகாமில் ஒரு மாணவிக்கு சின்ராஜ் எம்.பி. கண்ணாடி அணிவித்தபோது எடுத்த படம். அருகில் மதுரா செந்தில் உள்ளார்.

பரமத்தி அருகே சுகாதார துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-03-19 14:14 IST   |   Update On 2023-03-19 14:14:00 IST
  • தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் சுகாதார துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு‌‌ நாமக்கல் எம்.பி. சின்ராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட–கங்களை‌ வழங்கினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் சுகாதார துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்.பி. சின்ராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நல்லூர் வட்டார மருத்துவர் மேகலா முன்னிலை வகித்தார். ஜல்லிகட்டு பேரவை தலைவர் மதுராசெந்தில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் விழாவில் கலந்து கொண்டு பொது சுகாதாரத் துறையின் கீழ் நடைபெறும் திட்டங்கள் பற்றியும், மருத்துவ முகாம்களில் நடைபெறும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் குறித்தும் விளக்க உரையாற்றினார்.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெ–டுக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 2 குழந்தைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், சரவணன், அட்மா திட்ட தலைவர் தன்ராஜ், பேரூர் பேரூராட்சி தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பரமத்தி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News