உள்ளூர் செய்திகள்

அரூர், கடத்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம்

Published On 2023-07-24 16:16 IST   |   Update On 2023-07-24 16:16:00 IST
  • தருமபுரி மாவட்ட நிர்வாகம் உதவி மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து முகாமை நடத்துகின்றன.
  • தகுதிக்கேற்ப மருத்து வர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அரூர்,ஜூலை,

அரூர் கோட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம், அரூர், கடத்தூர், பாப்பிரெட்டி ப்பட்டியில் நடை பெறஉள்ளதாக கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தெரிவித்து ள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

மாற்றுத்திற னாளிகளுக்கு உபகரண ங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம்கள் அரூர் கோட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளன.

தருமபுரி மாவட்ட நிர்வாகம் உதவி மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து முகாமை நடத்துகின்றன.

முகாமில் முடநீக்கு சாதனம், செயற்கைகால் மற்றும் கை, மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகர ணங்கள் அவரவர் தகுதிக்கேற்ப மருத்து வர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அரூர் வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாட்சாபேட்டைப் பகுதியில் வரும் 28-ம்தேதியும், பாப்பிரெட்டிப் பட்டியில் உள்ள வட்டார வளமையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும் 31-ம் தேதியும், கடத்தூர் வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆகஸ்ட் 1-ம் தேதியும் காலை 10 மணி முதல் 1 மணி வரை முகாம் நடை பெற உள்ளது.

இதில் அப்பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளி பயனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

Tags:    

Similar News