உள்ளூர் செய்திகள்

சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-07 14:10 IST   |   Update On 2023-08-07 14:10:00 IST
  • மத்திய அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்ட கோஷங்களை நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் தொடங்கி வைத்தார்.

தென்காசி:

தென்காசி சமூக நல்லிணக்க கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் ஏ.ஐ.பி.சி. பிரிவு சார்பில் மணிப்பூர், அரியானா வன்முறையை தடுக்க தவறியதாகவும், பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர துடிப்பதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் தென்மண்டல ஏ.ஐ.பி.சி. தலைவர் டாக்டர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முதலியார் பட்டி அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.

வி.சி.க. மாவட்ட துணை செயலாளர் சித்திக் வரவேற்றார். நகர் மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, கடைய நல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் வெங்க டேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட கோஷங்களை நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாவட்ட பொறு ப்பாளர் ஜெயபாலன், நகர செயலாளர் சாதிர், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News