உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

திட்டக்குடி பகுதியில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

Published On 2023-11-05 07:32 GMT   |   Update On 2023-11-05 07:32 GMT
  • தலைமை காவலர் கோவிந்தராஜ், பவானி ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர்:

குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஏழுமலை, காவலர்கள் முருகானந்தம், ராஜா , தலைமை காவலர் கோவிந்தராஜ், பவானி ஆகியோர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக மினி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை சோதனை செய்த போது மூட்டைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது ெதரிய வந்தது. பின்னர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீ சார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் திட்டக்குடி தொழுதூர் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), ஒரங்கூர் சேர்ந்தவர் காளிமுத்து (30) என தெரிய வந்தது. மேலும் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.  

Tags:    

Similar News