உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

Published On 2023-05-19 09:28 GMT   |   Update On 2023-05-19 09:28 GMT
  • வாலிபர்கள் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தனர்.
  • கைதானவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் சுற்றி கொண்டிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சித்து பத்தன்(வயது 23), பல்லடம் சுக்கம்பாளை யத்தை சேர்ந்த முகிஜா என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர். தொடர்ந்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில், அவர்களது கூட்டாளிகளான ஒடிசா வை சேர்ந்த அமர்நாத்மூன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனு அகமத் ஆகியோர் செஞ்சேரிபுதூரில் கஞ்சா விற்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா பதுக்கி விற்ற மனு அகமத், அமர்நாத்மூன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்தும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வடக்கிபாளையம் போலீசார் வடக்கிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சருண்(26), முகமது முஸ்த பா(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News