உள்ளூர் செய்திகள்

சிவசக்தி வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்ற காட்சி.


சிவசக்தி வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

Published On 2022-09-02 14:28 IST   |   Update On 2022-09-02 14:28:00 IST
  • சிவசக்தி வித்யாலயாவில் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயாவில் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவினை முன்னிட்டு விநாயகர் சிலையை அலங்கரித்து விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி,அரிசி கொழுக்கட்டை,கடலை, சர்க்கரை பொங்கல்,சுண்டல், கடலை பருப்பு போன்ற பிரசாதங்களை படைத்து விநாயகர் துதி பாடல்கள், மந்திரங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடி அருகம்புல்,எருக்கம் பூக்களால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.

Tags:    

Similar News