உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்
- டாஸ்மாக் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் மதுபான பெட்டிகள் சுமை இறக்கும் தொழிலாளருக்கு கூலி உயர்வு கேட்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுபான பெட்டிகளை கடைகளுக்கு கொண்டு செல்லும் தனியார் ஒப்பந்ததாரர் கடந்த பல ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமலும், அதனை கொடுக்க மறுத்தும் தொழிலாளர் வைப்பு நிதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது சம்பந்தமாக கலெக்டர், மண்டல மேலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. மதுபான பெட்டிகள் சுமை இருக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்ைக மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து மதுபானங்களை ஏற்றாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.