உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்ய வந்த பெண்கள்.

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய முடியாமல் பெண்கள் தவிப்பு

Published On 2023-09-26 13:16 IST   |   Update On 2023-09-26 13:16:00 IST
  • மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.
  • பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மானாமதுரை

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வந்த குறுஞ் செய்தியை வைத்து 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஏற்கனவே விண்ணப் பிக்காதர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ஏராளமான பெண்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங் குள்ள இ-சேவை மையத் தில் தங்களது மேல்முறையீடு விண்ணப்பங்களை அளித்தனர். அப்போது அலுவலர்கள் அந்த மேல் முறையீடு செய்பவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்தபோது அவர்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வந்தது.

தொடர்ந்து அவர்களின் மேல்முறையீடு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இ-சேவை மைய அலுவலர்களும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்களும் குழப்பம் அடைந்தனர்.

இதே குழப்பத்தின் காரணமாக இளையான்குடி தாலுகாவிலும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த பின்னரும் இணையத்தில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் உள்ளதால் மீண்டும் பரிசீலனை ஏற்கப்பட்டு தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமா? அல்லது கட்டாயம் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமா? என்ற குழப்பத்தில் பெண்கள் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News