உள்ளூர் செய்திகள்

முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் நீதிபதிகள் பக்தவச்சலு, சுதாகர், பரமேசுவரி, சத்ய நாராயணன், இனியா கருணாகரன் உள்ளனர்.

பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

Published On 2022-08-26 08:47 GMT   |   Update On 2022-08-26 08:47 GMT
  • சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என பேசினார்.
  • திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ''நியூ மாடல் கேம்ப்'' தொடக்க விழா நடந்தது.

முகாமை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய்பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், இந்த முகாமில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் அரங்குகள் அமைத்து செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர் மூலம் செயல் விளக்கம் அளிப்பதுடன் கையேடுகளும் விநியோகிக்கப்படுகிறது .

இதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் நீதித்துறை (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு), வருவாய்த் துறை , காவல் துறை (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு), பொது சுகாதாரத் துறை, சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், மாவட்ட காசநோய் மையம், தொழுநோய் பிரிவு, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சைல்டு லைன் , மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத்துறை, முதியோர் உதவி எண் 14567, நகராட்சி நிர்வாகத் துறை ஆகிய 18 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது .

விழாவில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன் , போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1. அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 சத்தியநாராயணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைசாமி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

திரளான பொதுமக்கள், மாணவ , மாணவிகள் அரங்குகளை பார்வை யிட்டனர்.

Tags:    

Similar News