உள்ளூர் செய்திகள்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-27 08:34 GMT   |   Update On 2023-03-27 09:36 GMT
  • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.

இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.

நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News