உள்ளூர் செய்திகள்

வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-06-09 14:59 IST   |   Update On 2023-06-09 14:59:00 IST
  • வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது. தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி ,பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News