உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் திரண்ட கிராமமக்கள்.

நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி

Published On 2023-04-03 08:19 GMT   |   Update On 2023-04-03 08:19 GMT
  • காட்டாம்பூர் கண்மாய் நடுவே நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
  • கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தல் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பாசனம் பெற்று விவசாயம் நடந்து வருகிறது.

இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் வீட்டுமனை போடப்பட்டு உள்ளது. அதற்கு பாதை இல்லாத காரணத்தினால் கண்மாயின் நடுவே அவர் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் செய்தனர்.

அதன்பேரில் சேர்மன்சண்முக வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

இதைத்தொடர்ந்து சேர்மன் சண்முக வடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் ஆய்வு செய்து கண்மாய் நடுவே சாலை அமைக்க முயன்ற தனி நபர் மீது புகார் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாயில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

Tags:    

Similar News