கட்டுமான பொறியாளர் சங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
- திருப்பத்தூரில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
- கொத்தனார், சித்தாள் போன்றவர்களை கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்ய கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் கட்டிட சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார்.கூட்டத்தில் பொறியாளர்கள் மத்தியில் கட்டிட பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொறி யாளர்கள் கையாள வேண்டிய விதிமுறை கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.
பொறியாளர் கவுன்சில் அமைத்திடவும், கட்டிட பொருட்களின் விலை வாசியை கட்டுப்படுத்தி அதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திடவும், மாவட்ட பொறியாளர்கள் திட்ட குழுவில் பதிவு பெற்ற பொறி யாளர்களை குழுவில் நியமனம் செய்ய வேண்டும் என்று பல்ேவறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன.
மேலும் ஒவ்வொரு பகுதியிலும் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்த னார், மெய்காட்டள் (உதவி யாளர்) சித்தாள் போன்ற வர்களை கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்ய கட்டாயம் அறிவுறுத்த வேண்டும் என்று பொறியா ளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநில செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் சிவக்குமார், நியமன அலுவலர் ராமநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைவர்கள், மாநில மண்டல நிர்வாகிகள் என மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருப்பத்தூர் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் கண்ணன், முன்னாள் கட்டிட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.