உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். 

சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2022-06-11 09:51 GMT   |   Update On 2022-06-11 09:51 GMT
  • காளையார்கோவிலில் இன்று சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
  • சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகர் மையபகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இங்கு 3 பிரதான சிவபெரு மான் சன்னதிகளும், அம்மன் சன்னதிகளும், 2 பெரிய ராஜகோபுரங்க ளும் அமைந்துள்ளளன. இந்த கோவிலில் சுவாமி-அம்மனுக்கும் பங்குனி, வைகாசி, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது.

வைகாசி மாதத்தில் சோமேஸ்வருக்கும், சவுந்தர நாயகி அம்ம னுக்கும் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 9-வது நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

விழாவில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார். பா.ஜ.க. முன்னாள் தேசிய பொது குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் சக்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

Similar News