உள்ளூர் செய்திகள்

விழாவில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவிக்கான ஆணைகளை அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி உள்ளனர்.

சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள்-அமைச்சர்கள் பேச்சு

Published On 2023-03-14 07:32 GMT   |   Update On 2023-03-14 07:32 GMT
  • தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
  • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பேசினர்.

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-

மாவட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உதவும் சங்கங்கள் அமைத்து அதன்மூலம் பொது மக்களுக்கு உதவலாம் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒன்றிணைந்து அந்த உதவும் சங்கங்களின் பங்களிப்பு தொகையை பதிவு செய்வதன் மூலம் அரசின் சார்பில் வழங்கப்படும் அந்த தொகைக் கான 2 மடங்கு தொகையும் வழங்குவதற்கான வழிவகை யையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்.

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிவித்து பெண்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பராமரிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் 77 பள்ளிவாசல்களில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதனை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று சிறுபான்மை யினர் மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு, அவர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

கருணாநிதி வழியில் மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மை யினர் மக்களின் நலன் காக்கின்ற வகையில் அதற்கான திட்டங்களை அறிவித்து அவர்களின் நலனை காத்து வருகிறார்.

குறிப்பாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சிறப்பான நிர்வாகம் முதல்-அமைச்சர் தலைமையில் அரசில் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலும், அமை தியை நிலைநாட்டுகின்ற வகை யிலும் ஒரு சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News