புதுக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம்
- சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபதாரணி முன்னிலையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுக்கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், லெட்சுமி நகர் முதல் வடக்கு குடியிருப்பு வரை செல்லும் சாலைக்கு கலைஞர் சாலை என பெயர் வைக்கவும், மகளிர் உரிமைத் தொகை கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் யூனியன் தலைவர் முத்துராமலிங்கம், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் அமுதா லெட்சுமணன், சீதா வைரவன், செல்வி முத்து, முன்னாள் தலைவர் அன்பரசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.