மானாமதுரையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசியக்கொடி ஏற்றினார்.
- மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடிபகுதிகளில் 74-வது குடியரசு தின விழா நடந்தது.
மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன், எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சக்திவேல் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றினார்.துணைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அண்ணா துரை, மலைச்சாமி மற்றும் ஆணையாளர், அலுவலர்கள் கொடி வணக்கம் செலுத்தினர்.
திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதன் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு ஆட்சி குழுத் தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
விழாவில் மாணவ, மாணவிகள், ஆட்சிக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் ஜஹாங்கீர் நன்றி கூறினார்.
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைவர் நஜூமுதீன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோபிநாத், துணைத் தலைவர் இப்ராஹிம் மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.