உள்ளூர் செய்திகள்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2022-07-16 08:24 GMT   |   Update On 2022-07-16 08:24 GMT
  • தேவகோட்டை நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

தேவகோட்டை

தேவகோட்டை நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சாந்தி, மேலாளர் முன்னிலை வகித்தனர்.

பருவமழை தொடங்க இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள், சிறு பாலங்கள் அடிப்புறத்தில் முழுமையாக தூர்வார வேண்டும்.

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் நகர் பகுதியில் 84 கிலோ மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால்களையும், 15 கிலோ மீட்டர் உள்ள குளக்கால், 302 சிறு பாலங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

பன்றிகளால் டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் நிலை உள்ளதால் நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை உயிருடன் பிடித்து நகரின் எல்கையில் விட ஆணையாளர் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பெருமா கண்மாய், காட்டூரணி, அழகப்பா ஊரணி போன்ற நீர்நிலைகள் மேம்பாட்டுபணி மற்றும் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணி, வாரச்சந்தை மேம்பாட்டு பணி, அழகப்பா ஊரணி பூங்கா மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News