உள்ளூர் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-04-10 14:56 IST   |   Update On 2023-04-10 14:56:00 IST
  • சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
  • முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News