உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆதார் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்-கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-12-22 08:07 GMT   |   Update On 2022-12-22 08:07 GMT
  • வருகிற 27-ந் தேதிக்குள் பராமரிப்பு தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 3,790 மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் ரூ. 2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை வழங்க ப்பட்டு வருகிறது.

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திற னாளிகள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிக ளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார், வங்கிக்கணக்கு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி புகைப்படம், மாற்றுத்திறனாளியின் பாதுகாவ லர் புகைப்படம் ஆவ ணங்களில் அசல் மற்றும் நகலை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வருகிற 27-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே மாற்றுத் திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம், மேற்காணும் விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News