உள்ளூர் செய்திகள்

புதிய சைக்கிள் காப்பகத்தை மாணவிகளுடன் சேர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

புதிய சைக்கிள் காப்பகம் திறப்பு

Published On 2023-07-19 11:26 IST   |   Update On 2023-07-19 11:26:00 IST
  • பெண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய சைக்கிள் காப்பகத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் தமிழரசி எம்.எல்.ஏ. எடுத்து கொண்டார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசுபெண்கள் மேல்நிலை பள்ளி பல ஆண்டுகளாக இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு சைக்கிள் நிறுத்தம் வசதி இல்லாமல் இருந்தது. பள்ளிக்கு வெளியே சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வந்ததால் மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. தமிழரசி பள்ளிஅருகே உள்ள நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்தி கொள்ள வசதியாக தளம் அமைத்து சைக்கிள் காப்பகம் வைக்க நடவடிக்கை எடுத்தார்.

அதை தொடர்ந்து அங்கு புதிய சைக்கிள் காப்பகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. சைக்கிள் காப்பகத்தை பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதில் நகராட்சி துணைதலைவர் பாலசுந்தரம், தி.மு.க. ஒன்றியசெயலாளர் ராஜாமணி, நகரசெயலாளர் பொன்னுசாமி, நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமாறன், மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News