உள்ளூர் செய்திகள்

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 56-வது நாண் மங்களப் பெருவிழா நடைபெற்றது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்களப் பெருவிழா

Published On 2022-07-01 14:25 IST   |   Update On 2022-07-01 14:25:00 IST
  • குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 56-வது நாண் மங்களப் பெருவிழா நடைபெற்றது.
  • அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நாண் மங்களப் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குன்றக்குடி குரு மகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 56-வது நாண் மங்களப் பெருவிழா திருமடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நாண் மங்களப் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 10, 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர், பணியாளர்கள், அனைவருக்கும் பரிசுகள் வழங்கினர்.

தொடர்ந்து பள்ளி கல்லூரி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கினர். முன்னதாக 45-வது குருமாக சன்னிதான நினைவு மண்டபத்தில் மாலையிட்டு அருளாசி விழா நடைபெற்றது. தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள்

வழங்க ப்பட்டது.

மருத்துவமனைகளுக்கு நாற்காலி, மேல்நிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய மருத்துவர் செந்தில் குமரன், பேராசிரியர் மோகன்ராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் மருது மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News