உள்ளூர் செய்திகள்

விவசாயம் செழிக்க அம்மனுக்கு முளைப்பாரி விழா

Published On 2022-08-11 08:00 GMT   |   Update On 2022-08-11 08:00 GMT
  • விவசாயம் செழிக்க அம்மனுக்கு முளைப்பாரி விழா நடந்தது.
  • இதில் ஆயிரக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் அழியாதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி கிராமமக்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். மேலும் தினமும் இரவு வழிபாடு நடந்தது. நேற்று இரவு பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று மந்தைச்சாவடியில் வைத்தனர்.

பின்னர் காலை மீண்டும் மந்தைச்சாவடியில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அழியாத நாயகி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

முளைப்பாரிகளை சுற்றி பெண்கள் கும்மி கொட்டினர். அதன்பிறகு ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஊருணியில் அலசினர். இதில் ஆயிரக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த திருவிழா குறித்து கிராம மக்கள் கூறும்போது, விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி வளர்த்து அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News