உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை சந்தித்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறை கேட்டார்.

மக்கள் குறைகளை நேரடியாக சென்று நிவர்த்தி செய்யும் எம்.எல்.ஏ.

Published On 2022-06-10 15:29 IST   |   Update On 2022-06-10 15:29:00 IST
  • சிவகங்கை தொகுதியில் பொதுமக்களை நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகேட்டார்.
  • பொதுமக்கள் சொத்து வரிவிதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு செந்தில்நா தன் எம்.எல்.ஏ. நேரடியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அவரை கிராம மக்கள் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட்டம் கூடுவது பெரிதல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள்வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு துரோகம் செய்கிற ஆட்சி தான் இந்த ஆட்சி.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு செய் வதறியாது உள்ளனர். மின்வெட்டால் மக்கள் மிகுந்த துயரமடைந்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.தி.மு.க ஆட்சியில் ஓராண்டு ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

பொதுமக்கள் சொத்து வரிவிதிப்பால் வேதனையடைந்துள்ளனர்.மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு கட்சி என்றால் அது மறைந்த எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. தான்.தி.மு.க. அரசின் வேதனைகளை வீடு வீடாக எடுத்து சொல்ல வேண்டிய தருணமாக உள்ளது.எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. நூறாண்டுகள் ஆட்சி செய்யும் என்று ஜெயலலிதா கூறினார். அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் கோபி, ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News